சிறுவர் புத்தகம்: சிறந்த சிறுவர் புத்தகங்கள்
01. சிறுவர் நாடோடிக் கதைகள்தொகுப்பு: கி.ராஜநாராயணன்வெளியீடு: அகரம் பதிப்பகம்காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த பல சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. சிறுவர்களின் கற்பனை நிறைந்த உலகத்தை மேலும் விசாலமாக்கும் கதைகள். 02. ஆயிஷா (குறுநாவல்)இரா.நடராசன்வெளியீடு: பாரதி புத்தகாலயம்ஓர் அறிவியல் நூலுக்கு அதன் ஆசிரியை முன்னுரை எழுதுவதாக அமைந்ததே, இந்த நாவல். கல்வியை, அதன் நடைமுறையை, கற்பிக்கும் முறையை, அது குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பாதிப்பை அழுத்தமாய்ச் சொல்லும் புத்தகம்.03. குட்டி இளவரசன்அந்துவான் எக்சுபரி (தமிழில்: வெ.ஸ்ரீராம்)வெளியீடு: க்ரியா பதிப்பகம்பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகம். விமானம் பழுதடைந்ததால், பாலைவனத்தில் தரையிறங்குகிறார் விமானி. வெப்பம் வாட்டும் சூழலில், விண்மீனிலிருந்து வரும் ஓர் அழகிய சிறுவனோடு கழிக்கும் அற்புதப் பொழுதுகளே கதையாக விவரிக்கப்பட்டுள்ளது. 04. பூக்குட்டி சுஜாதாவெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்சிறுவர்களுக்கு இடையிலான நட்பில் ஏழை, பணக்காரன், சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உணர்த்தும் கதை. ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இந்த நாவல் பெரியவர்களும் வாசிக்கக்கூடியது. 05. பிஞ்சுகள்கி.ராஜநாராயணன்வெளியீடு: அன்னம் பதிப்பகம்இயற்கை எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். சிறுவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை ஊட்டும் விதத்தில், குறுநாவலாக எழுதப்பட்டது இந்தப் புத்தகம். இயற்கையை பாதுகாப்பதன் அவசியம், உயிர்களின் மீது ஏற்படும் பரிவு ஆகியவற்றை ஒரு சிறுவனின் பார்வையில் விவரிக்கிறது.