சிறுவர் பதிப்பகம்
'ஒவ்வொரு குழந்தையையும் வாசிப்புப் பழக்கம் கொண்டவராக உள்ள ஒரு நாட்டை உருவாக்குவதே லட்சியம்' என்ற நோக்கத்தை முன்னிறுத்திச் செயற்படும் சிறுவர் பதிப்பகம் 'கதா'. சிறுவர் பத்திரிகையாக 1988இல் தொடங்கி, பிறகு பதிப்பகமாக மாறிய நிறுவனம் இது. சிறுவர் புத்தகங்களைப் பதிப்பிப்பது மட்டுமன்றி, கல்வி வளர்ச்சிக்கு உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகவும் இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது. சிறந்த எழுத்தாளர்களுக்கு 'கதா விருது' இந்த பதிப்பகத்தால் வழங்கப்படுகிறது.இணையதளம்: www.books.katha.orgமுகவரி: கதா,ஏ3, பிளாக் ஏ, சர்வோதயா என்கிளேவ், ஸ்ரீ அரபிந்தோ மார்க், புது டில்லி - 110017.மின்னஞ்சல்: media@katha.org