காலநிலை மாற்றம் ஒரு பிரச்னையில்லை!
இங்கிலாந்தின் வட யார்க்ஷயரில் உள்ள ஸ்டார்கார் பகுதி குறித்து, காலநிலை மாற்ற வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், 11,000 ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குக் குறைந்தது தெரியவந்துள்ளது. அதைப்போல, 8,200 ஆண்டுகளுக்கு முன், மிகக்கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த மாற்றம் நூறாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. இவற்றை நம் முன்னோர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளனர். 'இதை ஒப்பிட்டால், நம் காலத்தில் நிகழும் காலநிலை மாற்றத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.