உள்ளூர் செய்திகள்

கோ-எட் பள்ளி மாணவர்கள் டாப்பு

தமிழகத்தில், தனித்தனி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ--எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக 'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில், +2 தேர்வை 6,258 பள்ளி மாணவர்கள் எழுதினார்கள். * ஆண்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 59.8 சதவீதம். * பெண்கள் பள்ளிகளில் படித்த மாணவியரின் தேர்ச்சி விகிதம் 66.2 சதவீதம்.* இருபாலர் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 63.6 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி விகிதம் 66.8 சதவீதம். ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்களைவிட, இருபாலின பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி விகித வேறுபாடு 5.3 சதவீதம் அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !