ஆக்கப்பூர்வமான தேடல் அவசியம்!
'மாணவர்கள் இணையத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்தலாம்?' என்ற தலைப்பில், சென்னை, கவரப்பேட்டை, ஆர்.எம்.கே.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துரையாடினார்கள். தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எழுதும் 'ஆர்.நரசிம்மன்' (சைபர்சிம்மன்) இந்த கலந்துரையாடலை வழிநடத்தினார். ஆர்.நரசிம்மன்கற்றலுக்கு ரொம்பப் பயனுள்ள சாதனம் இணையம். புத்தகம் வழியா கத்துக்கற பல விஷயங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிஞ்சுக்க மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம். ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்தறதுன்னா என்ன? சும்மா கண்டதையெல்லாம் படிச்சு நேரத்தை வீணடிக்காம, நாம எந்தத் துறையில ஆர்வமாக இருக்கோமோ அந்த விஷயத்தை முழுசாத் தெரிஞ்சுக்கவும், தெளிவாக்கவும் இணையம் உதவுது. நீங்க இணையத்தை என்ன மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் பயன்படுத்தறீங்கன்னு முதல்ல சொல்லுங்க.அ.ஏஞ்சல் டேலஸ் நான் படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தறேன். அது எனக்கு நிறைய பயனுள்ள தகவல்களைத் தருது. எனக்குப் பறவைகள் பற்றித் தெரிஞ்சுக்கறதுல ரொம்ப ஆர்வம். அதனால பாடம் தவிர, பறவைகளைப் பற்றிய தகவல்கள், எந்தெந்தப் பகுதிகள்ல எந்தெந்தப் பறவையெல்லாம் இருக்குன்னு தேடிப் படிப்பேன். அதைக் குறிப்புகளா எழுதி வெச்சுக்குவேன்.டி.யோ.வர்ஷாஎனக்கு கணிதத்துல ஆர்வம் அதிகம். அல்ஜீப்ரா, ஜியோமெட்ரிக் பற்றியெல்லாம் புதிய தகவல்களை இணையத்துல தேடிப் படிப்பேன். எளிய முறையில கணிதத்தை கத்துக்கறதுக்கான பல விஷயங்கள் இணையத்துல கிடைக்குது. ஆர்க்கிடெக்சர் எனக்குப் பிடிக்கும். கட்டடக்கலை உலகத்துல எப்படியெல்லாம் இருக்குங்கற தகவல்களையும் தேடிப்படிப்பேன்.க.பிரீத்திவிடுமுறை நாட்கள்ல மட்டும்தான் சில மணிநேரம் நெட் பார்க்க வீட்ல அனுமதிப்பாங்க. எனக்குப் பூக்கள் பற்றிய தகவல்களைத் தெரிஞ்சுக்கணும்னு நிறைய ஆசை. நெட்ல அது சம்பந்தமான விஷயங்களைத் தேடிப் படிப்பேன். பூக்கள் பற்றிய மொபைல் ஆப் இருக்கு. அதிலேயிருந்து நிறையத் தகவல்கள் கிடைக்குது. படிப்புக்குத் தேவையான விஷயங்களையும் தேடித் தெரிஞ்சுக்குவேன்.த.ஸ்வேதாஎனக்கு கவிதை, கதை, படிக்க, எழுதப் பிடிக்கும். உலக இலக்கியங்களை இணையத்துல தேடிப் படிப்பேன். ஆங்கில இலக்கணத்தையும் விரும்பிப் படிப்பேன். ஆங்கில மொழி வளத்தை உருவாக்கிக்க, பல சிறப்பான இணைய தளங்கள் இருக்கின்றன. அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.ரா.குஷால்பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்க இணையம் உதவுது. சில விஷயங்கள் வகுப்பறையில கேட்டாலும், படிச்சாலும் புரியாது. அதையெல்லாம் ஈசியா தெளிவாக்கிக்க இணையம் உதவுது. எனக்குப் பிடிச்ச தளம் 'பைஜு'. அந்தப் பக்கத்தை நிறைய வாசிப்பேன். ஆங்கில உச்சரிப்பு தொடர்பா யூ டியூப்ல இருக்கற வீடியோஸ் பார்ப்பேன். Do it yourself, மேஜிக் வீடியோஸ் பார்க்கப் பிடிக்கும்.பிஜா. எர்னஸ்ட் செல்வின் படிப்புக்கு உதவியா மட்டும்தான் இணையத்தைப் பயன்படுத்தறேன். எனக்கு மொபைல் போன் தொழில்நுட்பம் பத்திய தகவல்களைத் தெரிஞ்சுக்க ஆர்வம் அதிகம். ஜி.பி.எஸ். நெட்வொர்க் போல டெக்னிக்கலான அடிப்படை விஷயங்களை வீடியோவாவும், கட்டுரைகளாகவும் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன்.கீ.அனிஷ்எனக்கு எப்பவுமே வானம் ஆச்சரியம் தர்ற விஷயம். ஸ்பேஸ் பற்றிய பல தகவல்களை நான் இணையத்துல தேடிப் படிப்பேன். ரொம்ப எளிமையா புரியற விதத்துல இருக்கும். ஸ்பேஸ் பத்தி நிறைய புதுப்புது விஷயங்களை வீடியோக்களாக பார்த்துத் தெரிஞ்சுக்குவேன். அப்படிப் பார்த்த தகவல்களை, என் நண்பர்கள் கிட்டேயும் பகிர்ந்துப்பேன்.சு.பி.ஸ்ரீஜித்உயிரியல் எனக்குப் பிடிச்ச சப்ஜெக்ட். பாடத்துல இருக்கற உயிரியல் தவிர பல விஷயங்களை இணையத்துல தேடித் தெரிஞ்சுக்குவேன். உயிரின குடும்பம், உயிரியல் பெயர் அதனோட மற்ற தகவல்கள்னு பல இணையதளங்கள்ல இருக்கற செய்திகளையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன். நெட்ல கேம்ஸ் விளையாடப் பிடிக்கும். விடுமுறை நாள்ல கொஞ்சநேரம் மட்டும் நெட்ல கேம்ஸ் விளையாடுவேன். அனிமேஷன் படங்களும் பார்ப்பேன்.ஆர்.நரசிம்மன்எல்லோரும் ரொம்ப சிறப்பா சொன்னீங்க. படிப்பு சம்பந்தமாகவும், பொதுஅறிவுத் தகவல்களுக்காகவும் இணையத்தை நீங்க எல்லாம் பயன்படுத்தறீங்கன்னு தெரியுது. இது ஆரோக்கியமான விஷயம். இணையத்துல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் பாதுகாப்பு.அறிமுகம் இல்லாதவர்களுடன் உங்களோட தகவல்களைப் பகிர்ந்துக்கக் கூடாது. இணையம் என்பது நல்லது கெட்டது ரெண்டுமே நிறைஞ்சது. உங்களோட அறிவை விசாலப்படுத்திக்கவும், மேம்படுத்திக்கவும் பல இணையதளங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்க தேடித் தெரிஞ்சுக்கணும். கல்வி சார்ந்த தேடுதல்களுக்காகவே கூகுள் போல வேறு சில தேடும் இயந்திரங்கள் (Search Engines) இருக்கு. அது நாம தேடற சரியான தகவல்களைத் தரும். அதேசமயம் இணையத்துல இருக்கற எல்லா தகவலுமே சரியானதுன்னு எடுத்துக்கக்கூடாது. பல தளங்களையும் படிச்சுப் பார்த்தாதான் சரியான விஷயத்தைத் தெரிஞ்சுக்க முடியும். இணையத்தை முறையா பயன்படுத்தினா, அது நிச்சயம் நம்ம வாழ்க்கையை வளமாக்கும்.