உள்ளூர் செய்திகள்

குப்பை பொறுக்கும் பணியில் காக்கைகள்

பிரான்ஸில் உள்ள ஃபுடு டூ பியூ (Puy du Fou) எனும் தனியார் விளையாட்டுப் பூங்கா பிரபலமானது. இப்பூங்கா நிர்வாகம், 6 காக்கைகளுக்குப் பயிற்சி அளித்து, அவற்றைக் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. பூங்கா நிர்வாகி நிக்கோலஸ் (Nicolas de Villiers) கூறும்போது, “சிகரெட் துண்டுகள் உள்ளிட்ட குப்பைகளைப் பொறுக்கி, அருகிலிருக்கும் பெட்டியில் போட காக்கைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். பொதுவாக, இந்தப் பூங்காவிற்கு வரும் மக்களே குப்பைத் தொட்டிகளைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள்தான். எனவே, இந்தக் காக்கைகளை, குப்பை பொறுக்கப் பயன்படுத்துவது வெறும் தூய்மைப் பணிக்காக மட்டுமல்ல; இயற்கையே நமது சுற்றுச்சூழலைப் பேண கற்றுக் கொடுக்கிறது என்று மக்களுக்கு உணர்த்தவே இந்த ஏற்பாடு” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !