சைபர் குற்றவாளிகள்
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப்படங்களை இணையத்தில் பகிர்ந்தது தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டோர் மீது, கடந்த ஐந்து மாதங்களில் 25 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 15 வழக்குகள் முக்கிய வழக்குகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இவ்வழக்குகள் மகாராஷ்டிரம், டில்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இதர பெரிய மாநிலங்களிலுள்ள வழக்கு விவரங்கள் பெறப்படும்போது, இந்த எண்ணிக்கை உயரும் என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆவண மைய (NCRB) அறிக்கை.