தோனி உள்ளே... கங்குலி வெளியே
டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி தனது 500வது போட்டியில் பங்கேற்றது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், சிறந்த 11 வீரர்கள் கொண்ட 'கனவு' இந்திய அணியை, ரசிகர்கள் இணையதள ஓட்டெடுப்பின் மூலம் தேர்வு செய்தனர். இதில் துவக்க வீரர்களாக கவாஸ்கர், சேவாக் மற்றும் 3வது இடத்துக்கு டிராவிட் தேர்வானார். சச்சின், லட்சுமண் மற்றும் விக்கெட் கீப்பராக தோனி தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் கேப்டன் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.