தில்ஷன் குட் - பை
இலங்கை அணி 'ஆல் - ரவுண்டர்' தில்ஷன், கடந்த 1999ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 87 டெஸ்ட் (5492 ரன்), 329 ஒரு நாள் (10248), 78 'டுவென்டி - 20'யில் (1884) விளையாடி உள்ளார். சர்வதேச 'டுவென்டி - 20' அரங்கில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2013ல் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், சமீபத்திய ஆஸ்திரேலிய தொடருடன் ஒரு நாள் மற்றும் 'டுவென்டி - 20' போட்டியிலிருந்து விடை பெற்றார்.