உள்ளூர் செய்திகள்

விகற்பங்கள்

உங்கள் வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் ஒரே மாதிரியா தோன்றுகிறார்கள்?ம்ஹூம், இல்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். சிலர் குள்ளம், சிலர் உயரம், சிலர் ஒல்லி, சிலர் குண்டு, சிலர் வெள்ளை, சிலர் கருப்பு, சிலர் சுறுசுறுப்பு, சிலர் சோம்பல்.கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கினால், அதில் எல்லாப் பக்கங்களும் ஒரேமாதிரி அளவோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதுதான் பார்ப்பதற்கு அழகு.ஆனால், மனிதர்கள் எல்லாரும் அப்படி ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. பலவிதமான மனிதர்கள் ஒன்றாக இருப்பது இன்னோர் அழகு.செய்யுளிலும் இப்படித்தான். ஒரேமாதிரி சொற்கள் வரிசையாக அமைந்தால் ஓர் அழகு; வெவ்வேறுவிதமான சொற்கள் வரிசையாக அமைந்தால் இன்னோர் அழகு.எடுத்துக்காட்டாக, இந்த வரிகளைப் பாருங்கள்:மல்லிகைப் பூவே இங்கே வாஅல்லிப் பூவே அருகில் வாமுல்லைப் பூவே விரைவில் வாநல்லது சொல்வேன், உடனே வாஇந்தப் பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதல் சொற்கள் ஒரேமாதிரி அமைப்பில் உள்ளன: ம'ல்'லிகை, அ'ல்'லி, மு'ல்'லை, ந'ல்'லது என நான்கு சொற்களிலும் இரண்டாம் எழுத்து 'ல்' என அமைந்துள்ளது. இதனை எதுகை என்பார்கள்.ஆக, இந்தப் பாடலில் நான்கு அடிகள், ஒவ்வோர் அடியிலும் ஒரே எதுகை வந்திருக்கிறது. ஆகவே, இதனை 'ஒரு விகற்பம்' என்பார்கள்.'விகற்பம்' என்ற சொல்லின் பொருள், வேறுபாடு அல்லது வகை. 'ஒரு விகற்பம்' என்றால், நான்கு அடிகளின் தொடக்கமும் ஒரே வகையில் அமைந்துள்ளன.இப்போது, இந்தப் பாடலைக் கொஞ்சம் மாற்றுவோம்:மல்லிகைப் பூவே இங்கே வாஅல்லிப் பூவே அருகில் வாசாமந்திப் பூவே விரைவில் வாதாமரைப் பூவே ஓடி வாஇங்கே முதல் இரண்டு அடிகளிலும் ம'ல்'லிகை, அ'ல்'லி என ஒரே எதுகை வந்துள்ளது; அடுத்த இரண்டு அடிகளிலும் சா'ம'ந்தி, தா'ம'ரை என ஒரே எதுகை வந்துள்ளது. ஆகவே இதனை 'இரு விகற்பம்' என்பார்கள்.அடுத்து, இதே பாடலை மீண்டும் மாற்றுவோம்:மல்லிகைப் பூவே இங்கே வாஅல்லிப் பூவே அருகில் வாசாமந்திப் பூவே விரைவில் வாரோஜாப் பூவே உடனே வாஇங்கே முதல் இரண்டு அடிகளிலும் ம'ல்'லிகை, அ'ல்'லி என ஒரே எதுகை வந்துள்ளது; ஆனால் மூன்றாவது, நான்காவது அடிகளில் அவ்வாறு அமையவில்லை: அங்கே சாமந்தி, ரோஜா என எதுகை அல்லாத அமைப்பு வந்துள்ளது.இப்படி மூன்று வெவ்வேறு அமைப்புகள் இங்கே வந்திருப்பதால், இதனை 'மூ விகற்பம்' என்பார்கள்.உங்களிடம் திருக்குறள் புத்தகம் உள்ளதா? அதில் ஒரு விகற்ப, இரு விகற்பப் பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.- நாகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !