நீங்களே செய்யலாம் மவுத் ஆர்கன்
இசைக் கருவிகளை வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் பெரும் பாலானவர்கள், 'நமக்கு எங்கே வரப்போகிறது?' என்று முயற்சி செய்யத்தான் தயக்கம் காட்டுவார்கள். அதுவே ஓர் இசைக் கருவியை, நாமே நம் கைப்பட செய்ய முடியும் என்றால், உண்மையில் அவ்வளவாக வாசிக்கத் தெரியவில்லை என்றாலும் மகிழ்ச்சி உறுதி! எளிமையான முறையில் மவுத் ஆர்கன் ஒன்றை செய்து இசைத்துப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: 1. ஐஸ்கிரீம் குச்சிகள் 2. ரப்பர்பேண்ட் 3. பல் குத்தும் குச்சி 4. தாள் 5. பென்சில் 6. கத்தரிக்கோல் ஓர் ஐஸ்கிரீம் குச்சியைத் தாளில் வைத்து, வெளிக் கோட்டினை வரைந்து கத்தரிக்க வேண்டும்.இரண்டு ஐஸ்கிரீம் குச்சிகளின் இடையே, வெட்டிய துண்டுத் தாளினை வைத்து, இரு முனைகளிலும் 2 செ.மீ. இடைவெளி விட்டு ரப்பர்பேண்ட் போட்டு கட்ட வேண்டும். பல் குத்தும் குச்சியில் இரண்டு சிறிய துண்டுகளை வெட்டிக் கொள்ளவும்.இந்தத் துண்டுகளை ஐஸ்கிரீம் குச்சிகளின் இரு முனைகளிலும், ரப்பர்பேண்டிற்கு வெளியே பக்கத்திற்கு ஒன்றாக, படத்தில் காட்டியபடி செருக வேண்டும். அடுத்தென்ன? நாமே செய்த இந்த எளிய மவுத் ஆர்கனை, வாயில் வைத்து இசைத்து எல்லோரையும் அசத்த வேண்டியதுதான்.- ஓவியா டீச்சர்