உள்ளூர் செய்திகள்

உங்களுக்கு சமூகப் பொறுப்பு உண்டா?

சமூகப் பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் அவசியமானது. இளம்பருவத்திலேயே இதுகுறித்து, நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும். பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் நடந்துகொள்வதன் மூலம், சமூகம் சிறப்புடன் அமைய நாம் ஒவ்வொருவரும் காரணமாக அமைகிறோம். நீங்கள் எந்த அளவு சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதை, ஒரு எளிய கேள்வி - பதில் சோதனையின் மூலம் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.• ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. • உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்). • உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன. • மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். • அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.1) காற்றாடிவிடப் பயன்பட்ட மாஞ்சாக் கயிறு கழுத்தில் சுற்றியதால், இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவர் இறந்ததாக செய்தி வந்தது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?அ) காற்றாடி விடும்போது மேலும் கவனம் தேவை. ஆ) காற்றாடி விடுவதைத் தடை செய்ய வேண்டும்.இ) வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்2) உங்கள் குடும்பத்திலுள்ள வாக்காளர்களுக்கு, பணம் கொடுப்பதற்காக வேட்பாளர் வந்தால், உங்கள் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?அ) அவரைத் திட்டி அனுப்ப வேண்டும் அல்லது காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆ) பணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்களோ அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இ) பணத்தை வாங்கிக் கொண்டு அவருக்கே வாக்களிக்கலாமே. 3) உங்கள் வகுப்பிலுள்ள ஒரு மாணவரை, ஆசிரியர் அடிக்கடி கிண்டல் செய்வதால், அவன் மனம் நொந்து கிடக்கிறான். என்ன செய்வீர்கள்?அ) ஆசிரியர் கிண்டலடிக்கும்போது, நானும் சேர்ந்து சிரிப்பேன்.ஆ) பாவமாகத்தான் இருக்கும். ஆனால், நான் என்ன செய்ய முடியும்?இ) ஆசிரியரிடம் சென்று, அவன் மன நிலையை விளக்குவேன்.4) நாளைக்கு பொதுத் தேர்வு. இன்று உங்கள் வீடு இருக்கும் பகுதியில் மாலையிலிருந்து மின்வெட்டு. உங்கள் வீட்டில் இன்வெர்ட்டர் செயல்படுகிறது. என்ன செய்வீர்கள்?அ) சக மாணவர்களுக்காக பரிதாபப்பட்டுக் கொண்டே நான் தேர்வுக்குத் தயார் செய்வேன். ஆ) ஒருவிதத்தில் நல்லதுதான். மீதிப்பேரைவிட நான் அதிக மதிப்பெண் பெற ஒரு நல்வாய்ப்பு. இ) அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் சக மாணவர்களை, என் வீட்டுக்கு வந்து படிக்கச் சொல்வேன். 5) நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடச் சொல்லி, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?அ) வேண்டாத தீர்ப்பு. குடிக்கக்கூடாது என்று அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆ) நல்ல தீர்ப்பு. உடனடியாக அதுபோன்ற மதுக்கடைகளை மூட வேண்டும். இ) இந்தியாவில் உள்ள எல்லா மதுக்கடைகளையுமே மூடிவிடுவதுதான் நல்லது. 6) தெருவில் சாக்லெட் சாப்பிடுகிறீர்கள். அதன் மேலுறையை என்ன செய்வீர்கள்?அ) அப்படியே தெரு ஓரமாகப் போட்டுவிடுவேன். ஆ) கண்ணுக்கு எட்டிய தூரத்தில் குப்பைத் தொட்டி இருந்தால், அதில் போடுவேன். இல்லையென்றால், பக்கத்திலேயே ஓரமாகப் போட வேண்டியதுதான். இ) அந்த உறையைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, குப்பைத் தொட்டியைப் பார்க்கும்போது அதில் போடுவேன். விடைகள்அ ஆ இ 1) 4 8 02) 8 4 03) 0 4 84) 4 0 85) 0 4 86) 0 4 8• உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், உங்கள் சமூக உணர்வு பாராட்டத்தக்கது. இந்த உணர்வைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களால் நாட்டுக்குப் பெருமை. • உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், பெரிதாகக் கண்டனம் செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால், இன்னமும் நீங்கள் உங்கள் சமூக உணர்வை வளர்த்துக் கொண்டால், அது வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது. • உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால், அறியாமையா? சுயநலமா? அலட்சியப் போக்கா? இந்த அளவுக்கா சமூகப் பொறுப்பு இல்லாமல் இருப்பது? உடனே உங்கள் போக்கை மாற்றிக் கொள்வதுதான், உங்களுக்கும், சமூகத்துக்கும் நல்லது. - ஆருத்ரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !