தெரியுமா?: மெட்ராஸ் ரெஜிமென்ட்
இந்தியா ராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் இதுதான். 1660ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால், மெட்ராஸ் ரெஜிமென்ட் ஐரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு தொடங்கப்பட்டது. இதுதான் பின்னாளில் மெட்ராஸ் ரெஜிமென்டாக மாற்றம் பெற்றது.தற்போது தமிழகத்தின் உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டனில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, நமது அனேக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளிலும், ரகசிய நடவடிக்கைகளிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பங்களிப்பு இருந்தது. உலகின் மிக உயரமான சியாச்சின் பனிச்சிகரப் போர்க் களத்தை இன்றுவரை மெட்ராஸ் ரெஜிமென்ட் தான் பாதுகாத்து வருகிறது. ப்ளூ ஸ்டார் நடவடிக்கை, 1998 பொக்ரான் அணுகுண்டுச் சோதனை உள்ளிட்டவற்றிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பங்களிப்பு இருந்தது.