தெரியுமா?
பிரெஞ்சு பேரரசுக்கும் ஏகாதிபத்திய ரஷ்யாவிற்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் விதமாக, நெப்போலியனின் தலைமை அதிகாரி ஒரு முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். வேட்டைக்காகப் பெரிய முயல் கூட்டம் ஒன்றை முன்னரே பிடித்து கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தனர். கூண்டுகளைத் திறந்தவுடன் முயல்கள் பயத்தில் நடுங்கும் என எதிர்பார்த்த நிலையில், முயல்கள் அனைத்தும் அங்கிருந்த வீரர்கள் மேல் ஏறி தாக்கத் தொடங்கின. வீரர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனாலும், அடுத்த சில நிமிடங்களில் அனைத்து முயல்களையும் வேட்டையாடினர். சின்ன உயிரினமான முயல், மாவீரர்களை அதிர வைத்தது சிரிப்புக்குரிய நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.