உள்ளூர் செய்திகள்

புலம் பெயர் இந்தியர்களுக்கு முதலிடம்!

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவது என்பது வாடிக்கை. அந்த வகையில் உலக அளவில் புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் மக்களில் தங்கள் தாய்நாட்டிற்கு அதிக பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்திய மக்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 2016ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி அனுப்பியுள்ளனர். ரூ. 3 லட்சத்து, 97ஆயிரம் கோடி அனுப்பி, அடுத்த இடத்தை சீனர்கள் பிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !