உள்ளூர் செய்திகள்

குடிநீர் சுத்திகரிப்பு!

1970-களில் நாசா, தனியார் ஆராய்ச்சி நிறுவனமான உம்ப் க்வாவுடன் (Umpqua Research Company) இணைந்து நீரைச் சுத்திகரிப்பது பற்றிய புதிய வழிமுறையைக் கண்டறிந்தது. இம்முறையில், அயோடின் பொதியப்பட்ட அமைப்பின் வழியே நீர் செலுத்தப்படும். இதன் விளைவாக, நீரிலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்து, தூயநீர் அருந்தக் கிடைக்கும்.இது, நுண்ணுயிரித் தடை அடைப்பான் (Microbial Check Valve - MCV) முறை என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில், கழிவுநீரைக்கூட சுத்திகரித்துப் பயன்படுத்தினர். இது, குளோரினைப் பயன்படுத்தி நீரைச் சுத்திகரிப்பதைவிட சிறப்பானது.பாகிஸ்தான், ஈராக், டொமினிகன் குடியரசு உட்பட பல நாடுகள் இம்முறையைப் பின்பற்றித் தங்கள் குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !