பதினோரு லட்சம் மரக் கன்றுகள்
“ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்கள், மலைப்பகுதிகள் குறைவு. இதனால் இங்கே மழை அளவும் குறைவு. மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் இந்த 11 லட்சத்து 54 ஆயிரத்து 420 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. சாலையோரங்கள், நீர்நிலைகளின் கரைகள், அரசு அலுவலக வளாகங்கள் என பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும். இந்தப் பணியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். மண் கலவையைப் பைகளில் நிரப்புவது, நாற்று நடவு, நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்” என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.