மருத்துவர்களுக்கும் வருது கைரேகைப் பதிவு
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை, ஒரு மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் தாமதமாக வருவதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தாமதம் ஏற்படுகிறது; இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களின் வருகையைக் கண்காணிப்பதற்குப் போதுமான ஏற்பாடு இல்லாததால்தான், மருத்துவர்கள் தாமதமாக வருகின்றனர் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவர்களின் வருகைப் பதிவுக்கு கைரேகையை அடிப்படையாக கொண்ட பயோ மெட்ரிக் முறையை கொண்டு வரவேண்டும்-. பயோமெட்ரிக் தொடர்பான அரசாணையை, ஒரு மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.