உள்ளூர் செய்திகள்

படைபலம்: சரியா? தவறா?

பின்வரும் கூற்றுகளை வாசித்துச் சரியா? தவறா?என்பதைக் கண்டறியவும்.1. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் 'ஐ.என்.எஸ் அரிஹந்த்' (INS Arihant) ஆகும்.2. இந்தியாவின் முப்படைகளுக்கும் (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை) தலைமைத் தளபதி நாட்டின் பிரதமர் ஆவார்.3. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) 'இந்திய -சீன' எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் முதன்மையாகக் கொண்டுள்ளது.4. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள மிகச்சிறிய எல்லைப் பகுதி 'துரந்த் கோடு' என்று அழைக்கப்படுகிறது.5. எதிரி நாடுகளுடன் போரை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் முப்படைத்தளபதி.விடைகள்:1. சரி.2. தவறு. (குடியரசுத்தலைவர் தான் தலைமைத் தளபதி).3. தவறு (BSF முக்கியமாக பாகிஸ்தான், வங்காளதேச எல்லைகளைப் பாதுகாக்கிறது. சீன எல்லையைப் பாதுகாப்பது ITBP ஆகும்).4. சரி5. தவறு. (போரை அறிவிக்கும் அதிகாரமும், அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளும் நடவடிக்கையையும் மேற்கொள்பவர் குடியரசுத்தலைவர்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !