உள்ளூர் செய்திகள்

நான்கு கால் மேயர்

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ நதிக்கரையிலுள்ள ராபிட் ஹேஷ் (Rabbit Hash) எனும் சிற்றூரில், ஒரு புதுமையான வழக்கம் உள்ளது. 1990ம் ஆண்டு முதல், இவ்வூருக்கு மேயராக நாய் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலில் இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிட் புல் வகையைச் சேர்ந்த மூன்று வயதான பிரைனெத் (Brynneth Pawltr) எனும் சுட்டி நாய், மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ராபிட் ஹேஷில், ஓட்டுப் போடும் ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல் நிதியாக 1 டாலர் வழங்குவார்கள். இதில் சேரும் தொகை, நலத்திட்டத்திற்கு அளிக்கப்படுவது வாடிக்கை. இந்த முறை, தீ விபத்தில் கருகிப் போன ஊரின் பொது அங்காடியை மறுசீரமைப்பு செய்ய, இந்த தேர்தல் நிதி பயன்படுத்தப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !