இலவச வை-பை
சர்.சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்று, நாட்டுக்குப் புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன. அதனால், அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில் இலவச, 'வை - ஃபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. “இதனால், மாணவர்கள் பயன் அடைவார்கள். இந்த இரு கிராமங்களுக்கும் 'வை - ஃபை' வசதி அளிப்பது தொடரும்” என உலகெங்கும், 'வை - ஃபை' வசதியை ஏற்படுத்தித் தரும் 'வயர்லெஸ் பிராட்பேண்டு அலையன்ஸ்' நிறுவனம் கூறியுள்ளது.