ADDED : அக் 10, 2016 | ADDED : அக் 10, 2016
ஆப்பிள் பார்க்க அழகான, சாப்பிட சுவையான பழம் மட்டுமல்ல. வரைவதற்கும் மிக எளிமையான பழம்தான். அநேகமாக பல குழந்தைகள் வரைய தொடங்கும்போது ஆப்பிளைத்தான் வரைவார்கள். இந்த வாரம் நாம் ஆப்பிளை வரையப் போவதில்லை. எளிமையான தையல் மூலம் ஓர் அழகிய ஆப்பிள் கீ செயின் செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
ஃபெல்ட் தாள் - சிவப்பு, பழுப்பு மற்றும் பச்சை நிறங்களில். (ஃபெல்ட் தாளிற்கு பதில், அடர்த்தியான துணியைக் கூட பயன்படுத்தலாம்.) ஊசி நூல், பஞ்சு, பென்சில், கத்தரிக்கோல்சிவப்பு நிற ஃபெல்ட் தாளில் ஆப்பிள் வடிவத்தை வரைந்து கத்தரித்துக் கொள்ளவும். ஒரே அளவில் இரண்டு ஆப்பிள் வடிவங்கள் வெட்டிக்கொள்ள வேண்டும்.பச்சை நிறத் தாளில் இலையும், பழுப்பு நிறத் தாளில் காம்புப் பகுதியையும் வெட்டவும். ஒரு ஆப்பிள் வடிவத்தில் காம்பு மற்றும் இலைப் பகுதிகளைப் பொருத்தி தைக்க வேண்டும். அதன் மேல் மற்றொரு ஆப்பிள் வடிவத்தை வைத்து, ஓரங்களை தைத்து இணைக்க வேண்டும்.முழுவதும் தைத்து முடிக்கும் முன், இரண்டு ஆப்பிள் வடிவத்திற்கு இடையே பஞ்சைப் பரவலாக அடைத்துவிட்டு, தொடர்ந்து தைத்து முடிக்க வேண்டும்.இதை ஒரு சாவிக் கொத்தில் இணைத்தால், அழகிய ஆப்பிள் கீ செயின் ஆகிவிடும்!- ஓவியா டீச்சர்