செல் சொல்லும் சொல்
1. 'உறுப்பு' என்றால் கை, கால் போன்றவைதான் என்று நாம் நினைப்போம். ஆனால், மருத்துவ ரீதியில் 'தோல்' என்பது ஒர் உறுப்புதான். உடலில் பரந்து, விரிந்திருக்கும் மிகப் பெரிய உறுப்பு! 2. வளர்ந்த ஒரு மனிதனின் தோல் எடை சராசரியாக 3.6 கிலோ இருக்கும். ஒரு பேச்சுக்கு, தோலை விரித்துவைக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அது 22 சதுர அடி பரப்பளவுக்கு விரியும்! 3. தோல் செல்களின் வாழ்நாள் சராசரியாக 5 வாரங்கள்.4. ஒரு நாளைக்கு ஒருவர் தோலில் இருந்து 50 கோடி செல்கள் உதிரும். நம் வீட்டுத் தூசியில் பெரும்பகுதி இறந்த தோல் செல்கள்தான்.5. மெலனின் என்ற நிறமிதான் தோலின் நிறத்துக்குக் காரணம். பிறந்த ஆறு மாதத்தில்தான் குழந்தையின் தோல் நிறம் முழுமையாகத் தெரிய வரும்.