நன்றியுள்ள நாய்க்கு அதிகரிக்கும் ரசிகர்கள்!
சீனாவின் யூசோங் மாவட்டத்தில் உள்ளது சியோங்சியோங் நாய். இந்த நாயைப் பார்ப்பதற்காகவே, தினமும் நூற்றுக்கணக்கானோர் யூசோங் பகுதிக்குச் செல்கின்றனர். காரணம், அந்த நாய் தன் எஜமானருக்கு காட்டும் விசுவாசம். வேலைக்குச் செல்லும் தன் எஜமானருடன், மெட்ரோ ரயில் நிலையம் வரை அந்நாயும் தினமும் கூடவே செல்கிறது. அவர் ரயில் ஏறியதும், அந்த நாய் வீட்டுக்குத் திரும்பாமல், அங்கேயே ஓரமாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. அவர், வேலை முடிந்து திரும்பும் வரை, 12 மணி நேரம் அங்கேயே காத்துக் கிடக்கிறது. அதோடு அந்நிய நபர்கள் கொடுக்கும் உணவையும் வாங்கி உண்பதில்லை. இதை ஒருவர் வீடியோ எடுத்துப்போட்டார். இதையடுத்து, சீனா முழுவதும் அந்நாய்க்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர்.