உள்ளூர் செய்திகள்

துளசிகளின் அரசன்

திருநீற்றுப்பச்சைஆங்கிலப் பெயர்: 'பாசில்' (Basil)தாவரவியல் பெயர்: 'ஓசிமம் பாசிலிகம்' (Ocimum basilicum)தாவரக் குடும்பம்: 'லாமியாசியே' (Lamiaceae)வேறு பெயர்கள்: கரந்தை, துன்னூத்துப் பச்சிலை, பாசில் துளசி, துளசி அரசன்தாயகம்: இந்தியாதிருநீற்றுப்பச்சை, துளசி இனத்தைச் சேர்ந்த தாவரம். துளசிச் செடியைப் போலவே இருக்கும். எல்லா வகையான ஈரப்பதம் உள்ள வளமான மண்ணிலும் வளரும். சுமார் 130 செ.மீ. உயரம் வரை வளரும். வெட்ட வெட்டத் துளிர்க்கும் இயல்புடையது. இலைகள் நறுமணம் உடையதாக இருக்கும். வெள்ளை, ஊதா நிறங்களில் மிகச் சிறியதாக பூக்கள் பூக்கும். அதிக மணமுடைய, பருத்த பூங்கொத்துகளை உடையது. விதைகள் கடுகு போன்று சிறியதாக இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும் (Natural Anti---iflammatory), மருத்துவக் குணங்களும் கொண்ட மூலிகைச் செடி இது.பயன்தரும் பாகங்கள்: இலை, பூ, விதை, வேர்மருத்துவப் பயன்கள்:* உடல் சூட்டைத் தணிக்கும்.* நுரையீரலில் ஏற்படும் கோழையை அகற்றும்.* இரத்த ஓட்டத்தைச் சமநிலைப்படுத்தும்.* புற்றுநோயால் ஏற்படும் செல் இறப்பைத் தவிர்ககும்.* நீரில் ஊறவைத்தால் வழவழப்பாக மாறிவிடும் இதன் விதைகள், 'சப்ஜா' எனப்படும். இந்த விதைகள் பழச்சாறு, பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.* இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. * இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.* உலகம் முழுவதும் 'தாய் பாசில்' (Thai Basil) என்னும் பெயரில் இந்த மூலிகை பிரபலமாக அறியப்படுகிறது. இந்தப் பெயரிலேயே பல உணவகங்களும் உள்ளன.- கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !