லட்சத் தீவில் எத்தனை தீவுகள்?
லட்சத் தீவு, அரபிக் கடலில் கேரளா அருகே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அது ஒரு யூனியன் பிரதேசம்.லட்சத் தீவு என்று பெயர் இருந்தாலும் அங்கே இருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 என்று அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lakshadweep.nic.in குறிப்பிடுகிறது. இவற்றில் பத்து தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். இது ஒரே ஒரு மக்களவை தொகுதியைக் கொண்டிருக்கிறது. கவராத்தி (Kavaratti) இதன் தலைநகர். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மலையாள மொழி பேசுகிறார்கள். இங்கே தென்னை உற்பத்தி அதிகம். இப்போது, உலகில் உள்ள மிகப்பெரிய பத்து தீவுகளின் பெயர்களை அறிந்துகொள்வோம். அளவில் பெரியதில் இருந்து சிறியது என்கிற வரிசையில் இந்தப் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. 1. கிரின்லேந்து (Greenland) 2. நியூகினியா (New guinea)3. போர்னியோ (Borneo) (இது மலேசியா, இந்தோனேஷியா இரு நாடுகளுக்கும் சொந்தமானது.) 4. மடகாஸ்கர் (Madasgascar) ஆப்பிரிக்கா5. பாஃபின் தீவு (Baffin Island)கனடா.6. சுமத்ரா (Sumatra)இந்தோனேஷியா7. ஒன்சூ, (Honshu)ஜப்பான்8. கிரேட் பிரிட்டன் (Great britain)9. விக்டோரியா (Victoria) கனடா10. எல்ஸ்மையர் (Ellesmere) கனடா