உள்ளூர் செய்திகள்

எப்படிப் பறக்கிறாய்!

அறிவியல் ஆச்சரியங்கள் பல இருந்தாலும், விமானம் பறப்பதைப் பார்க்கிறபோது நமக்குள் உற்சாகம் பிறக்கும். விமானம் எப்படிப் பறக்கிறது?விமானம் பறக்கும் சக்தியைக் கொடுப்பது என்ஜின் (Engine). நான்கு அடிப்படையான வளி இயக்க விசைகள் (ஏரோடைனமிக் ஃபோர்சஸ் / Aerodynamic Forces) விமானம் பறப்பதற்கு உதவுகின்றன.எடை = மேலுந்து (Weight = Lift)பின்னுழுவை = முன்னுந்து (Drag = Thrust)விமானம் ஒரே உயரத்தில் நேராக சீராகப் பறக்க இந்தக் கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்.விமானத்தின் பின்னிழு விசையைவிட முன்னுந்து அதிகமாக இருக்கும்போது வேகம் கூடும்.முன்னுந்து விசையைவிட பின்னிழு விசை அதிகமாக இருக்கும்போது வேகம் குறையும்.விமானத்தின் எடை, மேலுந்து விசையை விடக் கூடுதலாக இருக்கும்போது கீழிறங்கும்.மேலுந்து விசை, விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் எடை, புவி ஈர்ப்பு விசை.விமானம் மேலே எழும்பியதும் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது. காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வைத் தடுக்கவே இப்படி அமைக்கப்பட்டுள்ளது. அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இரு மடங்காக இருக்கும். மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது.உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்: ஏர்பஸ் ஏ380விமானத்தின் வேகம், அதன் இறக்கை, காற்று இவை மூன்றும் இணைந்து செயல்பட்டு விமானம் உயரே எழும்பிப் பறக்க உதவுகின்றன. இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் விமானம் பறக்காது.* விமானத்தின் இறக்கை மேல்பாகம் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்ப்பாகம் தட்டையாக இருக்கும். இறக்கையோடு காற்று அசுர வேகத்தில் உராயும்போது, இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. கீழ்ப்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிகக் காற்றழுத்தம், ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றழுத்தப் பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் விதி. * விமானத்தின் மேலுந்து விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்.* ஃபிரான்ஸிஸ் காட்வின், சாமுவெல் பிரன்ட், ஜூல்ஸ் வெர்ன் போன்ற விஞ்ஞானக் கதை எழுத்தாளர்கள் தங்கள் கற்பனையில் வான்வெளிப் பயணங்களையும், வான ஊர்திகளைப் பற்றியும் எழுதிச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார்கள்! * இத்தாலிய ஓவியர் லியனார்டோ டாவின்ஸி இறக்கையால் இயங்கும் கற்பனை ஊர்திகளைத் தன் ஓவியங்களில் வரைந்திருக்கிறார். 2007 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலமாக வர்த்தக சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.432.6 மில்லியன் டாலர் மதிப்பு450 பயணிகள்: சிங்கப்பூர் முதல் சிட்னி (ஆஸ்திரேலியா) சென்றனர்.3100 சதுர மீட்டர் வெளிப் பரப்பளவு2005, ஏப்ரல் 27, ஏர்பஸ் ஏ380 (Airbus A380) உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் முதல் முறையாகப் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.800 பயணிகள் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் சாதாரண வகுப்பில் (Economy Class) பயணம் செய்யக்கூடியவர்கள் எண்ணிக்கை500 பயணிகள் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் சிறப்பு வகுப்பில் (Luxury Class) பயணம் செய்யக்கூடியவர்கள் எண்ணிக்கை72.7 மீட்டர் நீளம் = 2 நீலத்திமிங்கிலம்முதல் விமானம் கண்டுபிடிப்பு: அமெரிக்காவைச் சேர்ந்த வில்பர் ரைட் (Wilbur Wright) & ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள் 1903 டிசம்பர் 17 அன்று வெற்றிகரமாய் என்ஜின் மூலம் முதல் விமான ஊர்தியை இயக்கிச் சாதனை புரிந்தார்கள்.3000 ஒரே நேரத்தில் சுமந்து செல்லும். (ஒரு நபருக்கு சராசரியாக 6 சூட்கேஸ்கள் என்ற கணக்கில்)4 டர்போ ஃபேன் எஞ்சின்கள் (Turbo Fan Engine) 1025 / hr மணிக்கு 1025 கிலோ மீட்டர் வேகம் 43000 கிலோ மீட்டர் அதிக பட்ச பறக்கும் உயரம்.15700 கிலோ மீட்டர் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் பறந்து செல்லக்கூடிய தொலைவு 184 இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ380 விமானங்களின் எண்ணிக்கை 3600 லிட்டர் வெளிப்பரப்பளவுக்கு பூசத் தேவையான பெயின்ட் அளவு24.1 மீட்டர் உயரம் = 10 மாடிக் கட்டடம்80 மீட்டர் அகலம் = 35 அகல இறக்கை கழுகுகள்2 அடுக்குகள் தரை தளம் : 49.90 மீட்டர் நீளம்முதல் தளம் : 44.93 மீட்டர் நீளம்590 டன் எடை 165 யானைகளுக்கு சமம்3.2 லட்சம் லிட்டர் விமான பெட்ரோல் நிரப்பும் அளவு டேங்க்உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் அன்டோனோவ் ஏஎன் 225 (Antonov AN225) ஏர்பஸ் ஏ380 ஐ விட நீளமானது. ரஷ்யாவைச் சேர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !