உள்ளூர் செய்திகள்

பாட்டு எழுதுவது எப்படி?

ஒரு பாட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று சென்ற வியாழன் 'பட்டம்' இதழில் பேச ஆரம்பித்தோம். சந்தம் என்பதைப் பற்றிச் சொன்னோம். 'இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு' - இந்த அடிகளில், போட்டு, ஓட்டு என்பது சந்தம் இல்லையா? இதை ஈஸியாக நாம் உருவாக்கலாம். இதற்கென அகராதிகளையோ பெரிய பெரிய புத்தகங்களையோ புரட்ட வேண்டியது இல்லை. நாம் தினமும் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளைக் கவனிக்கும் திறமை இருந்தாலே போதும். 'குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா எழுதிய ஒரு ஜாலியான பாடலைப் பார்ப்போம்…வட்டமான தட்டுதட்டு நிறைய லட்டுலட்டு மொத்தம் எட்டுஎட்டில் பாதி விட்டுஎடுத்தான் மீதம் கிட்டுமீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில் பிட்டுகிட்டு நான்கு லட்டுபட்டு நான்கு லட்டுமொத்தம் தீர்ந்த தெட்டுமீதம் காலித் தட்டுபடித்துவிட்டீர்கள். நான் குறிப்பிட்ட, கடைசி வார்த்தைகளை எல்லாம் பார்த்தீர்களா, தட்டு, லட்டு, எட்டு, விட்டு, பிட்டு… பாட்டில் வரும் கிட்டு, பட்டு என்பவை நபர்களின் பெயர்கள். நம் வசதிக்கு ஏற்ப வைத்துக்கொள்ளலாம். மற்றபடி சில வார்த்தைகள் மறுபடி வந்திருக்கின்றன. ஆனால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை வைத்தே எவ்வளவு சந்த நயத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர்!இப்போது உங்களுக்கு ஒரு சின்ன வேலை…கீழே இரண்டு வார்த்தைகள் உள்ளன. அவற்றிற்கு சந்தமாக எத்தனை வார்த்தைகள் உங்களால் சொல்ல முடிகிறது என்று முயன்று பாருங்கள்…பல், ஆட்டம்.முடிந்ததா? எத்தனை வார்த்தைகள் சந்தமாக சொன்னீர்கள்? நீங்கள் சொன்னதாக நான் நினைக்கும் வார்த்தைகளை சொல்லவா? முதல் வார்த்தையான 'பல்'லுக்கு, கல், சொல், நல், நில், மெல், வில்… முதலிய வார்த்தைகளை சொன்னீர்களா? அதேபோல, ஆட்டம் என்பதற்கு சந்தமாக, ஊட்டம், கூட்டம், கோட்டம், தோட்டம், மூட்டம், வாட்டம்… போன்றவை உங்கள் மனதில் தோன்றினவா? இன்னும் நிறைய வாசிக்க வாசிக்க, உங்களுக்கு மொழி வளம் பெருகும். அப்போது, அல் (இரவு), இல் (வீடு), சில் (குளிர்ச்சி), காட்டம் (காரம்), தேட்டம் (தேடுவது), நாட்டம் (விருப்பம்) போன்ற சொற்கள், உங்கள் வார்த்தை வங்கியில் வளர்ந்துவரும். இவ்வளவுதான் சந்தம்.ஒரு பாட்டுக்கு சந்தம் தவிரவும், மோனை, எதுகை என்று இரண்டு முக்கியமான விஷயங்களும் உண்டு. மோனை என்றால் என்ன?இன்னொரு பாட்டைப் படித்து வைக்கச் சொல்லியிருந்தோம், நினைவிருக்கிறதா?சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (அடி 1)சந்தனச் சிலையே சாய்ந்தாடு (அடி 2)கட்டிக் கரும்பே சாய்ந்தாடு (அடி 3)கண்ணின் மணியே சாய்ந்தாடு (அடி 4)இந்தப் பாட்டின், நான்கு அடிகளின் (வரிகளின்) முதல் எழுத்துகளையும் கவனியுங்கள். 'சா'ய்ந்தாடம்மா - 'ச'ந்தனச் சிலை; 'க'ட்டிக் கரும்பு - 'க'ண்ணின் மணி…இப்படி பாடல் அடிகளின் முதல் எழுத்து ஒரே எழுத்தாக வருவது மோனை. இந்தப் பாட்டில், 'சா - ச'; 'க - க' என்று வந்திருப்பதைப் பார்க்கலாம். இதே அடிப்படையில் ஒவ்வொரு அடியின், முதல் வார்த்தைகளின் (செய்யுளிலும் பாடலிலும் வார்த்தை என்பதை, 'சீர்' என்று சொல்வது வழக்கம்) இரண்டாம் எழுத்துகள், ஒரே எழுத்தாக வந்தால் அதற்கு 'எதுகை' என்று பெயர். அதாவது, ஒரு அடியின் (முதல் வார்த்தையின்) இரண்டாம் எழுத்து 'ற' என்று இருந்தால் இரண்டாம் அடியின் இரண்டாம் எழுத்தும் 'ற'வாகவே இருப்பது. கீழே உள்ள பாட்டு பெருஞ்சித்திரனார் எழுதியது. அதில் எதுகை எப்படி அமைந்து இருக்கிறது என்று பாருங்களேன்…பறந்து வந்த காக்கை எல்லாம் பள்ளிக் கூடம் போட்டதாம் (வரி - 1)மறந்து போன பாட்டை எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டதாம் (வரி - 2)கழுத்தைச் சாய்த்துக் காதை வளைத்து கவனத்தோடு நின்றதாம் (வரி - 3)எழுத்தில்லாமல் ஏடில்லாமல் எல்லாம் கற்றுக் கொண்டதாம் (வரி - 4)நந் தன் வீட்டுக் கூரை மேலே நாளும் வந்து கூடுமாம் (வரி - 5)குந்தி இருந்து பாடம் படித்துக் கூடிப் பறந்தே ஓடுமாம் (வரி - 6)இரையைக் கண்டால் காகா என்றே இனத்தைக் கூவி அழைக்குமாம் (வரி - 7)உரையைக் கேட்டே காக்கை எல்லாம் ஒன்றாய் உண்டு பிழைக்குமாம். (வரி - 8)அடிகளின் முதல் வார்த்தைகளாக, பறந்து - மறந்து; கழுத்து - எழுத்து; நந்தன் - குந்தி; இரையை - உரையை… இப்படி வருகிறதில்லையா? இவற்றில் இரண்டாம் எழுத்துகள் எல்லாமே ஒன்றாக வருகின்றன. இதுதான் எதுகை. மோனைக்கும் இந்தப் பாட்டில் இருந்தே உதாரணம் பார்த்துவிடலாம்! பறந்து - பள்ளி; கழுத்து - கவனம்; நந்தன் - நாளும்; இரை - இனம்; உரை - ஒன்று…முதலெழுத்து ஒன்றாக வருவதால் இவை மோனை. இதில் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேள்வி கேட்க நீங்கள் துடிப்பது புரிகிறது. 'நந்தன் - நாளும்' - இதில் ந, நா என்று இரண்டு விதமாக வருகிறதே? அதே போல 'உரை - ஒன்று' இரண்டு முதல் எழுத்துகளும் ஒன்றா?இதைத்தானே கேட்க வந்தீர்கள்? பாடல் எழுதுவதில் அப்படியும் ஒரு விதி உண்டு. 'ந' என்கிற எழுத்துக்கு 'ந'கர வரிசை அனைத்தும் மோனை ஆகும். அதே போல, 'ஈ'க்கு 'ஐ', 'உ'வுக்கு 'ஒ' போன்ற எழுத்துகள் மோனை ஆகும். சுருக்கமாகச் சொல்வதானால், நம் காதுக்குக் கேட்கும் ஒலி ஒரே மாதிரி இருந்தால், அதை மோனை என்று கொள்ளலாம்.எதுகை, மோனை, சந்தம் ஆகியவை இருந்தால் போதுமா?இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அடுத்த வியாழன் (27 அக்டோபர்) 'பட்டம்' இதழில் பார்ப்போம். அதன் பிறகு, நாமே சொந்தமாக நமது முதல் பாடலை எழுதிப் பார்த்துவிடலாம்…அடுத்த பகுதியில் பார்ப்போம்.மோனை - எதுகைபாட்டு எழுதும் பயிற்சியின் முதற் பகுதியில், 'அம்மா இங்கே வா வா' பாட்டில் மோனை இருக்கிறதா, எதுகை இருக்கிறதா என்று பிறகு பார்ப்போம் என்று சொல்லியிருந்தோம்.அந்தப் பாட்டில் எதுகை இல்லை. எந்த இரண்டு அடிகளின் இரண்டாம் எழுத்தும் ஒரே எழுத்தாக இல்லை. கவிஞர் ஏன் அப்படி எழுதினார்? ஒவ்வொரு அடியின் முதல் எழுத்தும் உயிரெழுத்துகளின் வரிசையிலேயே தொடங்க வேண்டும் என்பதை மட்டுமே தனக்கான விதியாக அவர் வகுத்துக்கொண்டதால், அப்படி எழுதி இருக்கிறார். 'ஒலி ஒரே விதமாக இருந்தாலும் போதும்' என்கிற விதியைக் கணக்கில் கொண்டால், அம்மா இங்கே வா வாஎன்பதில் உள்ள 'அ' என்கிற எழுத்துக்கு -ஆசை முத்தம் தா தா என்பதில் உள்ள 'ஆ' மோனை என்று கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !