உள்ளூர் செய்திகள்

பசி அதிகரிக்கச் செய்யும் செடி

வெள்ளருகுஆங்கிலப் பெயர்: 'குளோரி லில்லி' (Glory Lily)தாவரவியல் பெயர்: 'எனிகோஸ்டெம்மா லிட்டோரேல்' (Enicostemma Littorale)வெள்ளருகு, சிறு செடி வகையைச் சார்ந்தது. நிமிர்ந்த வளரியல்பு கொண்ட, பல்லாண்டுகள் உயிர்வாழும் தாவரம். 'ஜென்டியானாசியே' (Gentianaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறு செடி, கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. வெளிறிய பச்சை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் இலைகள் காணப்படும். இலைகள் கசப்புச் சுவை உடையவை. தண்டுப் பாகம் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும். தண்டுகள் நான்கு கோணமானவை, வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்டவை. இலைகள், ஈட்டி போல நீண்டு உருண்டை வடிவமானவை. பூக்கள் ஐந்து இதழ்களுடன் கூடியவை, வெண்மையானவை, தொகுப்பானவை, கணுக்களில் அமைந்தவை. ஆண்டு முழுவதும் மலர்கள் காணப்படும். பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். பூக்கள், கணுக்களில் பூக்கும். இது 30 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் நீளமாக 15 செ.மீ. நீளத்துடனும், 5 செ.மீ. அகலத்துடனும் இருக்கும். இந்தச் செடிகள், விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் கரிசல் மண் உள்ள பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. வெள்ளருகு முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மருத்துவ குணம் நிறைந்தது. நோய் நீக்கி உடலைத் தேற்றும். பசியை அதிகரித்தல், மலமிளக்குதல், விஷக்கடி முறிவு போன்றவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகளில், தரிசு நிலங்களில், ஆற்றுப் படுகைகளில் பரவலாகக் காணப்படுகிறது. - கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !