ஐ இன்னொரு தோனி!
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. ௪௨.௧௯௫ கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து முகமது யூனுஸ் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பிடித்தவர் பரிசு வாங்கச் செல்லும்போது ரசிகர்கள் 'தோனி…தோனி' என உற்சாகக் கூச்சலிட்டனர். ஆங், இவரது பெயரும் தோனிதான். முழுப் பெயர் பகதூர் சிங் தோனி. கிரிக்கெட் வீரர் மகேந்திர தோனியைப் போலவே இவரும் உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.