சொலானம் பத்திச் சொல்லணும்!
'எனக்குத் தக்காளி ரசமே பிடிக்காது' என்று சொல்லும் சுட்டியா நீங்கள்? படியுங்கள்...நாம் சாதாரணமாக ரசத்தில் பார்ப்பது தக்காளி. அதில் பத்துக்கும் மேற்பட்ட அமிலங்கள் உள்ளன. தக்காளியில் அதிக அளவில் உள்ளது சிட்ரிக் அமிலம் (Citric Acid). ஏறக்குறைய அதே அளவில் மாலிக் அமிலமும் (Malic Acid) உள்ளது. உடலுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்ய சிட்ரிக் அமிலம் உதவுகிறது. ஜனவரி 2014ல் வெளியான ஜர்னல் ஆஃப் எண்டோரலஜி (Journal of Endourology) என்ற ஆய்வு, மாலிக் அமிலம் கல் உருவாவதை தடுக்கிறது என்கிறது. தக்காளி அதிகமாகச் சாப்பிட்டால் கல் உருவாகும் என்ற கருத்துக்கு இது மாறுபட்டதாக இருக்கிறது.தக்காளியில் அதிகளவில் வைட்டமின் 'சி' உள்ளது. வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid) என்றும் சொல்லப்படுகிறது. நோய் எதிர்ப்பானாகவும் இது செயல்படுகிறது. நமது எலும்பு, தோல், நரம்புகளை ஒன்றிணைப்பதோடு பாதுகாக்கவும் செய்கிறது.தக்காளியில் குளுக்கோஸ் சர்க்கரை உள்ளதால் எலுமிச்சை போல் இது மிகுந்த புளிப்பாகத் தெரிவதில்லை. தக்காளியின் அறிவியல் பெயர் சொலானம் லைகோபெரிஸிகம் (Solanum lycopersicum).