உள்ளூர் செய்திகள்

முயலும் ஆமையும் சேர்ந்தால்...

பொசு பொசுவென்று உடல் முழுக்க முடிகளுடன் பார்க்க ஒரு பொம்மையைப் போல் இருக்கும் முயல் குட்டிகளை நம் எல்லோருக்கும் பிடிக்கும். பொம்மைகளைப் போலவே வெள்ளை, கறுப்பு, பழுப்பு என பல்வேறு நிறங்கள் முயலுக்கு. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது. துன்புறுத்தாது. பயந்த சுபாவம் உள்ள தாவர உண்ணி. காடு, புதர், பொந்துகளில் வசிக்கும். ஆண் முயல் டோ (doe) என்று அழைக்கப்படுகிறது . பெண் முயலுக்கு பக் (buck) என்று பெயர். முயல் குட்டிகள் பன்னிஸ் (bunnies) என்று பெயர். இவை தனித்து வாழாமல், குழுக்களாகவே வாழும். முயலின் சராசரி ஆயுட்காலம் பத்து ஆண்டுகள். கூர்மையான பார்வை, நுட்பமான ஒலியறியும் திறன் கொண்டது. வலுவான பின்னங்கால்கள் கொண்டிருகின்றன. இவை ஒரு மீட்டர் உயரம், மூன்று மீட்டர் தூரம் தாண்டக் கூடியவை. மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்தில் ஓடக் கூடியது. இங்கிலாந்தில், முயல்கள் அதிக அளவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. முயல் மாமிசத்துக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் தோலில் இருந்து 'பெல்ட்' உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வந்து, முயல் தூங்கி ஆமை ஜெயித்த கதை எல்லாம் உண்மையில் நடந்திருக்காது... 'முயலாமை' நமக்கு உதவாது என்பதற்காகச் சொல்லப்பட்ட கதை அது என்பது உங்களுக்குப் புரிகிறது, அல்லவா...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !