உள்ளூர் செய்திகள்

Look என்றால் இவ்வளவா!

“கண்ணாடி போட்டதும் உன் look-கே மாறிப்போச்சுடா அஜிதா” என்றார் மாமா.“இல்லையே மாமா, எனக்கு பொடி எழுத்துகூட நல்லாத் தெரியுதே…” என்றான் அஜிதன்.“அடப்பாவி, உன் முகம் அழகா ஆயிடுச்சுன்னு சொன்னேன்” என்றார் மாமா. “ஓ… நீங்க பாசத்தோட look விடுறீங்க, அப்பிடித்தான் தெரியும்” என்றான் அஜிதன் குறும்பாக!“நீயே வந்து மாட்டுறியே… ஓகே… இப்போ lookங்கிற வார்த்தையை விதவிதமாப் போட்டு ஒரு கதை சொல்றேன். உனக்கு அர்த்தம் புரியுதான்னு பார்ப்போம். ஈஸியா இருக்குறதுக்காக, தமிழும் இங்லீஷும் கலந்து சொல்றேன்” என்றுவிட்டு கதையை ஆரம்பித்தார் மாமா.“உன்னை மாதிரி ஒரு பையன். He looked up to his uncle Ram as someone he can go to for advice. ராம் அடிக்கடி அவனைப் பார்க்க வருவார். Ram was looking for a new flat. He spent the weekend looking through the newspapers. He wanted some advice so he looked up the boy's phone number and அவனை போன்ல கூப்பிட்டார். மறுநாள், they looked at some possibilities on the outskirts of Tambaram. Ram was looking for a bargain but the boy told him to look out for flats which needed a lot of work doing. In every flat they looked over, the electrics and the plumbing. அவங்க பார்த்த எல்லா ஃப்ளாட்டும் விலை அதிகமா இருந்துது. So, they looked into the possibility of getting a loan from the bank. கடைசியா அவங்களுக்கு ஒரு நல்ல ஃப்ளாட் அமைஞ்சுது. And uncle Ram was really looking forward to moving in. விலை அதிகம்தான், ஆனாலும் uncle Ram will look after.” சொல்லி முடித்தவர், “இதுக்கெல்லாம் பேர் ஃப்ரேஸல் வெர்ப் (Phrasal verb). சின்ன வினைச்சொல்லோட, வேற வேற prepositions சேரும்போது வேற வேற அர்த்தம் வரும். இந்த க்ளூவை வச்சே, சரியான அர்த்தத்தைக் கண்டுபிடி, பார்ப்போம்” என்றார். அஜிதன், சில சொற்றொடர்களுக்கு சரியான அர்த்தம் சொன்னான். சிலவற்றிற்குத் 'தெரியவில்லை' என்றான். உங்களுக்குத் தெரிந்ததை சரிபார்த்துக்கொள்ள, ஒவ்வொரு சொற்றொடரின் பொருளும் கீழே தரப்பட்டுள்ளது. looked up to மதித்தல் looking for (கண்ணுக்குத் தெரியும் பொருளை) தேடுவதுlooking through (பல விஷயங்களில் ஒன்றை) தேடிப்பார்ப்பதுlooked up தேடிக் கண்டுபிடிப்பது looked at (கண்ணில் பட்டதைப்) பார்ப்பதுlooking for எதிர்பார்த்தார் look out for (எச்சரிக்கையாக) looked over (சோதித்துப் பார்ப்பது) looked into (விசாரித்துப் பார்ப்பது) looking forward to விருப்பத்தோடு எதிர்பார்ப்பது look after (கவனித்துக்கொள்வது, பார்த்துக்கொள்வது)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !