உள்ளூர் செய்திகள்

நிலா பெரிதானால்

பிப். 1 - நிலவின் வடிவம் சற்று பெரிதானால், வளிமண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி மழை பெய்வது கொஞ்சம் குறைவதாக, புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால், நிலவின் வெளிவட்டச் சுற்று அவ்வப்போது விரிவு அடைந்தும், சுருங்கியும் காணப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், வளி மண்டலத்தில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், வெப்பக் காற்று குளிர்வதில் பிரச்னை ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைவதால், மழைப் பொழிவு சற்று குறையும், எனினும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் 1998 - 2012 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை வைத்து உறுதி செய்துள்ளதாக வாஷிங்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் சுபாசா கொயமா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !