செய்முறைத் தேர்வு
ஜன. 13 - பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளின் செய்முறை தேர்வுகள் எப்போது என, அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த அறிவிப்புக்காக மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.