உள்ளூர் செய்திகள்

பார்வை இழப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும்

மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாக, 2050ம் ஆண்டில், தற்போது இருப்பதை விட, பார்வைத் திறன் பாதிப்பு உடையோரின் எண்ணிக்கை மூன்றுமடங்காக உயரும் என்று, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.188 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 20 கோடிக்கும் அதிகமான மக்களிள் மிதமானது முதல் தீவிரத்தன்மையுடைய பார்வைக் கோளாறுகளால் அவதிப்படுவது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு மற்றும் கிழக்காசியப் பகுதிகளில் உள்ள மக்கள் பார்வைக் குறைபாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனராம். அதுபோலவே, கண்புரை பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். ஒவ்வொரு நாடும் இதனைக் கருத்தில் கொண்டு, பார்வைக் கோளாறுகளுக்கென்று கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !