சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்கப்போவதில்லை
வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில், 19வது சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும், சார்க் மாநாட்டைப் புறகணிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றன. பாகிஸ்தானில் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிக்கக் காரணங்களாக, எல்லை கடந்த தீவிரவாதம், எல்லை தகராறு பிரச்சினைகள் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் சார்க் மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.