உள்ளூர் செய்திகள்

புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டுபிடித்த இந்தியச் சிறுவன்

பிரிட்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளிச் சிறுவன், கிர்தின் நித்தியானந்தம். இவருக்கு 16 வயதுதான் ஆகிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஒரு வகை மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை முறையை இவர் கண்டறிந்துள்ளார். கிர்தின், 'டிரிபிள் நெகடிவ்' மார்பகப் புற்றுநோய்' எனப்படும் புற்றுநோய்க்குக் காரணமான புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார். கடந்த ஆண்டில், அல்சைமர் நோய் (Alzheimer's disesase) வருவதற்கு 10 வருடங்களுக்கு முன்னாலேயே, அது வர இருப்பதை உறுதி செய்யும் சோதனை முறையை இவர் கண்டுபிடித்தார். இதற்காக, கடந்த ஆண்டின் கூகுள் அறிவியல் கண்காட்சி விருது இவருக்குக் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !