மிக நீளமான கூந்தல் இந்தியச் சிறுமி உலக சாதனை
குஜராத்தைச் சேர்ந்தவர், பதினாறு வயதாகும் நிலான்ஷி படேல். இவரது கூந்தலின் நீளம் எவ்வளவு தெரியுமா? 5.7 அடி. இதுவே, தற்போது கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.சிறுவயதில் பாப்கட் தான் இவருக்குப் பிடித்த சிகை அலங்காரம். ஒரு கட்டத்தில் அது பிடிக்காமல் போகவே, 'இனி நான் முடிவெட்டிக் கொள்ளமாட்டேன்' என்று பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார். பெற்றோரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்படியே பத்து ஆண்டுகள் வெட்டாமல் வளர்க்கப்பட்ட கூந்தல், இப்போது உலக சாதனையாகி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டது. “எனது நீண்ட கூந்தலைப் பராமரிப்பதில் என் தாயும், சகோதரனும் பெரிதும் உதவி வருகின்றனர்” என்று நிலான்ஷி தெரிவித்துள்ளார்.