உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் மிக இளைய வில்லாளி

ஐந்து வயதாகும் ஷிவானி (Cherukuri Dolly Shivani) அதற்குள் இந்தியாவின் சாதனைப் புத்தகத்தில் மட்டுமல்லாது ஆசிய சாதனைப் பட்டியலிலும் தன் பெயரைப் பொறித்துள்ளார். ஐந்து வயதிலேயே வில்லேந்தி களமிறங்கியுள்ள இச்சிறுமி, 10 மீட்டர் தூரத்திலுள்ள இலக்குகளை 103 அம்புகளால் துளைக்க, இவர் எடுத்துக் கொண்ட நேரம் 11 நிமிடம் 19 விநாடி. 20 மீட்டர் தூரத்தில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டபோது, 5 நிமிடம் 8 வினாடிகளில் 36 அம்புகளைச் செலுத்தியுள்ளார். மொத்தம் 360 புள்ளிகள் கொண்ட போட்டியில் 290 புள்ளிகளை வென்று சாதனை படைத்துள்ள இவ்வீரச் சிறுமியை, இந்தியாவின் துணை ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !