உள்ளூர் செய்திகள்

கவனம் கவரும் நூல்கள்

2019இல் வெளிவந்து பலரது கவனத்தைக் கவர்ந்த சுற்றுச்சூழல் நூல்கள் இவை:Choked - Beth Gardinerஅமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெத் கார்டினர். இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்படும் காற்று மாசுபாடு பாதிப்பு, அதன் விளைவுகள் பற்றி ஆராய்ந்துள்ளார். விறகுகளைக் கொண்டு சமைப்பதால் ஏற்படும் மாசுபாடு, லண்டனில் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசு, வோக்ஸ்வேகன் மோசடி பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.Underland - Robert Macfarlaneபூமியில் மனிதர்கள் நிலத்திற்குக்கீழ் ஏற்படுத்திய கனிமச் சுரங்கங்கள், கழிவுக் கிடங்குகள், அணுக்கழிவுகள் ஆகியவற்றைப்பற்றி அக்கறையுடன் பேசுகிறது இந்நூல். நார்வேயிலுள்ள கடல் குகைகள், கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகள் என, ராபர்ட் தான் பயணம் செய்த இடங்களில், இயற்கையுடனான நெருக்கமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.Floating Coast - Bathsheba Demuthரஷ்யா மற்றும் கனடா நாடுகளுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பகுதி பெர்னிங்கா. இங்கு 150 ஆண்டுகளாக நிலவும் சூழல் அரசியலை விரிவாக எழுதியுள்ளார். இப்பகுதியில் தங்கம், எண்ணெய் வளங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எப்படி சூழலை அழிக்கின்றன என ஆசிரியர் பெமுத் விவரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !