உள்ளூர் செய்திகள்

இரும்புப் பெண் இந்திரா

இந்திரா காந்திபிறந்த இடம்: அலகாபாத்19.11.1917 - 31.10.1984குறைவில்லாத வசதிகளுடன் அரண்மனையில் பிறந்தாலும் தூக்கிக் கொஞ்ச யாருமின்றி தனியாகவே வளர்ந்தார். ஏனெனில், தாத்தா மோதிலால் நேரு ஒரு சிறையிலும், அப்பா நேரு இன்னொரு சிறையிலும் இருக்க, அம்மாவும், பாட்டியும் வெள்ளையருக்கு எதிரான ஊர்வலங்களில் தீவிரமாக இருந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் வளர்ந்ததால் சிறு வயதிலேயே சுதந்திரப் பற்று அதிகம் இருந்தது. விளையாடும் வயதில் தன்னைப்போன்ற சிறுவர்களுடன் இணைந்து 'வானர சேனை' என்ற ஓர் அணியை உருவாக்கினார். அவர் தான், 'இந்தியாவின் இரும்புப் பெண்' இந்திரா காந்தி.சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றார். சிறையில் இருந்து தனது அப்பா எழுதிய கடிதங்கள் அவருக்கு உலக வரலாறுகளைத் தெரிந்துகொள்ள உதவின. இயற்கை, மனித வாழ்வு, உலக நாடுகளின் நாகரிகம் என ஒவ்வொன்றைப் பற்றியும் நேரு எழுதி அனுப்ப இந்திரா சேர்த்துக்கொண்டே வந்தார். தன் அன்னையின் மறைவுக்குப் பிறகு, குடும்ப நண்பரான பெரோஸ் காந்தியுடன் இந்திராவுக்கு திருமணம் ஆனது. இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, நேரு பிரதமரானார். பெரோஸ் உத்தரப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். ராஜீவ், சஞ்சய் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தனர். 1960ல் மாரடைப்பால் பெரோஸ் மரணமடைந்தார். இதுவரை சாதாரணமாகக் கடந்த இந்திராவின் வாழ்க்கை 1960க்குப் பிறகு, சரித்திரம் பேசும் அரசியல் வாழ்வாக மாறியது. அடுத்த சில ஆண்டுகளில் (1964) நேருவும் மறைந்தார். இந்தியாவின் 2வது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இந்திராவுக்கு ஒலிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டது. இந்தத் துறையில் அவர் செய்த சாதனைகளுக்குப் பிறகு, 1966ல் இளம் வயதிலேயே இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார். பொக்ரான் அணுகுண்டு சோதனை, பசுமைப் புரட்சி, வங்கதேச உருவாக்கம், வங்கிகள் தேசிய மயம் என பல புதிய சாதனைகளையும் செய்தார். மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும் மக்கள் போற்றும் 'இரும்புப் பெண்மணி' ஆக என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்.வகித்த பதவிகள்1964 - 1966: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்1966 - 1977; 1980-1984 - இந்தியப் பிரதமர் கூடுதல் பொறுப்புகள்1967- 1977: மத்திய அணுசக்தித் துறை அமைச்சர்1967 - 1969: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்1970 - 1973: மத்திய உள்துறை அமைச்சர்1972 - 1977: மத்திய விண்வெளித்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !