உள்ளூர் செய்திகள்

கடுங்குளிரைத் தாக்குப்பிடிப்பது பனிக்கரடியா? பெங்குவினா?

பனிக்கரடி, வடதுருவமான ஆர்டிக் பகுதியில் வாழும் பாலூட்டி; பெங்குவின், தென் துருவமான அன்டார்டிக்கா பகுதியில் வாழும் பறவை. இவை இரண்டுமே குளிர்ந்த தட்பவெப்பநிலையில் வாழும் உயிரினங்கள். இவை இரண்டிற்கும், கடுமையான குளிரை தாக்குப்பிடிப்பது யார் என்ற போட்டி வைத்தால் ஜெயிப்பது யார் தெரியுமா? பனிக்கரடிநிலத்தில் வாழும் விலங்குகளில்அதிக மாமிசத்தை உண்ணும் உயிரினம்.உணவைத் தேடி நீண்ட தூரம் பனியில்நடக்கும் இயல்புடையது.நீச்சலில் கில்லாடி. பனிக்கட்டிகளை உடைத்து நீருக்குள் நீச்சலடித்து இரையைத் தேடும். கடும்குளிரைத் தாங்கும் விதத்தில், இதனுடைய தோலுக்குள் இருக்கும் கொழுப்பு, உடலை எப்போதும் வெப்பமாக வைத்திருக்க உதவும்.அபார மோப்பசக்தியால், இரை இருக்கும் இடத்தை எளிதில் அறிந்து கொள்ளும்.மைனஸ் முப்பது டிகிரி குளிரிலும், இரையைப் பிடிக்கும் அதிரடி வேட்டைக்காரன்.பெங்குவின்சக்கரவர்த்தி பெங்குவின்கள் (Emperor penguin) உருவத்தில் பெரியவை.நீச்சலில் திறமைசாலி. உணவைத் தேடி, நீரின் ஆழத்திற்குச் செல்லும்.இதன் தோலின் அடியில் உள்ள கொழுப்பு, உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலின் வெப்பநிலையை சீக்கிரம் இழந்து விடாமல் இருக்க, எப்போதும் கூட்டமாகத் திரியும்.இரையைத் தேடிச் செல்லும் பெங்குவின்கள்,சில மாதங்கள் வரை நீருக்குள்ளேயே இருக்கும்.ஆண் பெங்குவின்கள் மைனஸ் அறுபது டிகிரி குளிரிலும் கூட முட்டையை அடைகாக்கும்.வெற்றி யாருக்கு?நிச்சயம் பெங்குவின்தான் வெற்றியாளர். ஏனெனில், சூரியன் உதிக்காத கடுமையான குளிர் காலத்திலும் தூங்காமல், முட்டையை, வெதுவெதுப்பாக அடைகாக்கும் பணியை பெங்குவின்கள் செய்கின்றன. பனிக்கரடிகள் குளிர் காலத்தில் தூங்கிவிடும்.பெண் சக்கரவர்த்தி பெங்குவின் மட்டும்தான் அன்டார்டிக் குளிரில் முட்டையிடும்.மற்ற இன பெங்குவின்கள், கோடையில்தான் இனப்பெருக்கம் செய்யும். ஆண் சக்கரவர்த்தி பெங்குவின் 65 நாட்கள் தொடர்ந்து நின்று கொண்டிருக்கும் பொறுமைசாலி. மைனஸ் அறுபது டிகிரி குளிரடிக்கும் காலத்தில் முட்டைகளுக்கு தேவையான வெப்பத்தை கொடுக்க அசையாமல் ஒரே இடத்தில் நிற்பது அவசியம். இரைதேடச் சென்ற பெண் பெங்குவின் திரும்பும் வரை முட்டைகளை அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !