உள்ளூர் செய்திகள்

இப்படி ஒரு நாடு இருக்கா...?

''தாத்தா''''என்னடா?''''தமிழ்ப் பாடத்துல வர்ற சில வரிகளுக்குப் பொருள் புரியலை தாத்தா!'' ''என்ன வரிகள்? சொல்லு பார்க்கலாம்!'' என்றார் தாத்தா.''சோழ நாடு சோறுடைத்து; சேர நாடு வேழமுடைத்துபாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நன்நாடு சான்றோர் உடைத்து''ன்னு இருக்கு தாத்தா...”“எல்லாமே உடைஞ்சு போச்சா?ன்னு கேட்கப் போறியா?”“அட, அதில்லை தாத்தா... அந்தப் பாட்டுல இருக்குற நாடுகள் எல்லாம் இப்போ எங்கே தாத்தா இருக்கு?'' ''இப்பிடி வந்து உக்காரு” என்ற தாத்தா தொடர்ந்தார், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாகவும், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களின் சில ஊர்களையும் உள்ளடக்கியது தொண்டை நாடு. நிறைய படித்த அறிஞர்கள் நிறைந்த ஊர் என்பதை 'சான்றோர் உடைத்து'ன்னு சொல்றாங்க...''''ஓ... அப்ப, சென்னையில பிறந்த நானும் சான்றோர்தானா?'' சிரித்தான் கதிரவன்.''அதுக்கு நீ இன்னும் நிறைய படிக்கணும்'' என்றார் தாத்தா. தொடர்ந்து, ''சோழ நாடான தஞ்சையில், நிறைய நெல் விளைஞ்சு மக்களோட பசியைப் போக்கிச்சு. சேர நாடான கேரளத்துல நிறைய யானைகள் இருந்துச்சு. பாண்டிய நாடான மதுரையில நிறைய முத்து கிடைச்சுது...''''அப்ப, 'உடைத்து'ன்னா 'உடையது'ன்னு அர்த்தமா?'' என்றபடி எழுந்து சென்றான் கதிரவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !