தொடக்கப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ISO 9001 - 2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. கரூர் மாவட்டத்தில், முதன்முதலாக இந்த விருதைப் பெறும் பள்ளி இது. பள்ளியில் நடைபெற்ற விழாவில், இதற்கான சான்றிதழை, தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணனும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களும் பெற்றுக்கொண்டனர்.