உள்ளூர் செய்திகள்

பிச்சை புகினும் கற்கை நன்றே!

அன்றைய கல்வி முறை திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலப் பள்ளி, தனிநிலையில் கற்றல் என மூன்று நிலைகளில் இயங்கியது.திண்ணைப் பள்ளிகிராமங்கள் தோறும் இயங்கின. அவற்றை 'தெற்றிப் பள்ளி' என்றும் அழைத்தனர். ஒரே ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தன. மணலில் எழுதுவார்கள், ஓலைச்சுவடியிலும் எழுதுவார்கள். எழுதிய ஓலைச்சுவடியை பாதுகாப்பார்கள். குருதட்சணை தருவார்கள். ஆசிரியருக்கான வழிபாடு இருக்கும். குருகுலக் கல்விவிடியற்காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்வார்கள். ஆசிரியரின் துணியை துவைத்துப் போடுவார்கள். வெந்நீர் வைத்துத் தருவார்கள். 'ஆசிரியர் குதிரையில் ஏறிச்சென்றால் என் தந்தை அதன் லகானை பிடித்தபடி செல்வார் ' என்கிறார் உ.வே.சா. பொறுமையுடன் இருப்பார்கள். 'பிட்சை' (யாசகம்) கேட்டு உண்பார்கள். ஆசிரியருக்குக் கொடுத்தபின் உண்பார்கள்.தண்டனை கடுமையாக இருக்கும். திண்ணை, குருகுலக் கல்வி முடிந்து இலக்கண, இலக்கியங்களைக் கற்க, பல்வேறு ஆசிரியரிடம் செல்வார்கள். காரணம், அந்தக் காலத்தில் இலக்கியங்கள் எல்லாம் ஒரே இடத்தில் இல்லை. அவை வெவ்வேறு கற்றறிந்த புலவர்களிடம் இருந்தன.உ.வே.சா. திண்ணைப் பள்ளியில் ஓலைச்சுவடியில் படித்தவர். ஆனாலும் பிற்கால ஏட்டுக் கல்வி முறையை கற்பிக்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார். அவர் கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தன் மகன் இசையில் புகழ்பெற்று விளங்க வேண்டும் என்பதுதான் உ.வே.சா.வின் தந்தை வேங்கடசாமி ஐயருக்கு விருப்பம். ஆனால், சாமிநாதருக்கு தமிழ் மீதிருந்த பற்றைப் பார்த்துவிட்டு, அவரைத் தமிழ் படிக்க அனுப்பினார். எங்கெங்கு தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ அங்கெல்லாம் உ.வே.சா.வின் தந்தை வீட்டை மாற்றிக்கொண்டே இருந்தார். அப்போது சிறந்த தமிழ் நூல்கள் ஒரே இடத்தில் இல்லை. பல்வேறு நபர்களிடம் இருந்தது.1870ஆம் ஆண்டு ஏப்ரலில் உ.வே.சா. தனது குருவான வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்க வந்தார். அன்று முதல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்கை எய்தும்வரை (1.2.1876) அவருடன்தான் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !