உள்ளூர் செய்திகள்

யானையை விரட்டும் கருவி கென்ய மாணவிகள் அசத்தல்

கென்யாவில், மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்கும் விதத்தில், பள்ளி மாணவிகள், யானையை விரட்டும் கருவியை உருவாக்கியுள்ளனர்.கென்யாவில், விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளை மக்கள் விரட்டும்போது, சில சமயங்களில் யானைகள் மனிதர்களைக் கொன்று விடுகின்றன. இதனால் கோபமடையும் மக்கள், யானைகளைக் கொல்வதும் நடக்கிறது. இம்மோதலைத் தடுக்க, கஜிரே (Kajire) பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவியர், ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். நடோவு கேர் (Ndovu Care) என்ற இக்கருவி, சூரிய சக்தியில் இயங்கக்கூடியது. யானைகள் தொலைவில் வரும்போதே, கண்டறிந்து, அவற்றை விரட்ட பயங்கரமான ஒலியை எழுப்பும். மேலும், யானை நடமாட்டம் குறித்து, ஏற்கெனவே பதிந்துள்ள எண்களுக்கும் குறுஞ்செய்தியை அனுப்பிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !