உள்ளூர் செய்திகள்

அயல்மொழி அறிவோம்: இரண்டுநாட்களில் எழுத்துக் கூட்டி வாசிக்கலாம்!

'பிரியாணி' 'கைது,' 'மகசூல்,' 'தபேளா,' 'சர்பத்' என்று நாம் பயன்படுத்தும் பல சொற்கள், அரபிச் சொற்கள். பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளுக்கு இருக்கும் மவுசு அரபிக்கும் உண்டு. வளைகுடா நாடுகளில் பேசப்படும் மொழி அரபி. அங்கே வேலைசெய்ய செல்லவேண்டுமென்றால், அரபி தெரிந்திருப்பது நிச்சயம் கூடுதல் பலனைக் கொடுக்கும் என்கிறார் டாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி; சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வுபெற்ற அரபி மொழிப் பேராசிரியர். அவரோடு பேசினோம்:அரபி மொழியை எல்லோரும் கத்துக்கலாமா?அரபி எல்லோருக்குமான மொழி. அராபியர்கள் பல நாடுகளுக்கும் வணிகம் செய்யச் சென்றதால், எல்லா மொழிகளிலும் அரபிச் சொற்கள் கலந்திருக்கும். எழுத்துகள் பார்க்க வித்தியாசமா இருந்தாலும், பயிற்சி எடுத்துக்கொண்டால், இரண்டே நாட்களில் எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும். அரபிமொழியில் பொருளை வைத்து சொற்கள் கற்பிக்கப்படுவதில்லை. சொற்களைக் கற்ற பின்னரே, பொருள் என்னவென்று தெரிந்துகொள்ள முடியும்.மொழியோட இலக்கணம் எப்படி இருக்கும்?அரபிமொழிச் சொற்களில், ஆண்பால், பெண்பால் வகைகள் இருக்கு. ஒருமை, பன்மை தவிர, அரபியில் இருமைங்கிறதும் இருக்கு. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குப் பல சொற்கள் உண்டு. அதனால, இலக்கணத்தைக் கத்துக்கணும். இந்த மொழியைக் கத்துக்க படிநிலைகள் எதுவும் கிடையாது. முதலில் பேசணும், பிறகு, எழுத்துகளைக் கத்துக்கணும். அடுத்து, இலக்கணம். தமிழ்லயே நிறைய அரபுச்சொற்கள் இருக்கறதால, ஒலியைக் கத்துக்க பெரிய கஷ்டம் இருக்காது.என்னென்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கு?வளைகுடா நாடுகளில் இதுதான் ஆட்சி மொழி. அங்கே பெரும்பாலும் அரபிமொழியிலதான் வணிகம் நடக்குது. அதேமாதிரி, இங்க ஐ.டி. நிறுவனங்களில பேக் ஆபீஸ் வேலைகள் நிறைய நடக்குது. மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படறாங்க. மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலைகளும் இங்கே வருது. அரபிமொழி தெரிஞ்சவங்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.தொடர்புக்குடாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி -நிறுவனர், அகாடமி ஆஃப் அரபிக் ஸ்டடீஸ், 11/6 மாணிக்கம் மேஸ்திரி தெருஇராயப்பேட்டை, சென்னை 14தொலைபேசி: 94443 23011


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !