உள்ளூர் செய்திகள்

சொல்லறிவோம்

ஆ, என்றால் பசு என்று படித்திருப்பீர்கள். பசுவிற்கு தமிழில் நிறைய பெயர்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளலாமா?குரம், குரால், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை. பசுக்கூட்டம்: ஆநிரை, கதம்பம், கதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு.பசுக்கொட்டில்: ஆனிலை, கோட்டம், தொழு, படப்பை.பசு, காளை இரண்டிற்கும் பொதுவான பெயர்: ஆ, ஆன், கோ, பெற்றம்.பசுவின் கன்று: கோதனம், தன்னம், வசு, வற்சம், கொற்றி.பசுவின் மடி: ஆபீனம், செருத்தல், சுரை.ஆதாரம்: வீரமாமுனிவரின் சதுரகராதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !