திருடனுக்கு கடிதம்!
கேரள மாநிலம், தலச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்தவாரம் மூன்று லேப்டாப் உட்பட பல பொருட்கள் திருடுபோயின. இதுபற்றி, காவல்துறையினரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர்கள், திருடனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 'நீ திருடிய பொருட்களுடன் பென் டிரைவையும் எடுத்துப் போய்விட்டாய். அது இருந்தால்தான் எங்களுக்குச் சம்பளம் கொடுப்பார்கள். அதனால், அந்த 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு' என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.